ம.பி., சத்தீஸ்கரில் புதிய ஆலை பாரத் எர்த் மூவர்ஸ் அமைக்கிறது
ம.பி., சத்தீஸ்கரில் புதிய ஆலை பாரத் எர்த் மூவர்ஸ் அமைக்கிறது
ADDED : மே 15, 2025 01:51 AM

பெங்களூரு:பொதுத்துறை நிறுவனமான 'பாரத் எர்த் மூவர்ஸ்', மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மாநிலங்களில், புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்நிறுவன ஆலை, 2,100வது மெட்ரோ ரயில் பெட்டியை உற்பத்தி செய்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், கொடி அசைத்து ரயில் பெட்டியின் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார்.
மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில், ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்ய, அம்மாநில அரசு, 60 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கி ஒப்புதல் வழங்கி உள்ளது. அதேபோல், சத்தீஸ்கரின் ஜன்ஜ்கிரி - சம்பா மாவட்டத்தில், சுரங்க கட்டுமான இயந்திரங்களுக்கான உற்பத்தி ஆலையை அமைக்க, அம்மாநில அரசு, 100 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கி உள்ளது.