சூரிய மின்சக்தி கணக்கெடுப்புக்கு 'பைடைரக் ஷனல்' மீட்டர்கள்
சூரிய மின்சக்தி கணக்கெடுப்புக்கு 'பைடைரக் ஷனல்' மீட்டர்கள்
ADDED : மார் 03, 2024 02:21 AM

சென்னை:மத்திய அரசு, நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
அத்திட்டத்தில், ஒரு கிலோ வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாயும்; இரண்டு கி.வாட்டிற்கு, 60,000 ரூபாயும்; அதற்கு மேல், 78,000 ரூபாயும் மானியம் வழங்குகிறது.
வீட்டில் அமைக்கப்படும் சூரியசக்தி மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, உரிமையாளர் பயன்படுத்தியது போக, மீதி மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்கலாம். இதனால் மின் கட்டண செலவு குறையும். தமிழகத்தில் உள்ள பலரும், மத்திய அரசின் திட்டத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
அந்த இணைப்புகளில் மின் வாரியம் சார்பில், 'பைடைரக் ஷனல்' மீட்டர் பொருத்தப்படும். இதற்காக முதல் கட்டமாக, 8,000 மீட்டர்கள் வாங்கும் பணியில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.
இந்த மீட்டரில், சூரியசக்தி மின் உற்பத்தி, உரிமையாளர் பயன்படுத்தியது, மின் வாரியத்திற்கு வழங்கியது, மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்திய அளவு ஆகியவை பதிவாகும்.

