ADDED : நவ 09, 2024 10:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'பிக்கி'யின் புதிய தலைவராக 'இமாமி' நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஹர்ஷவர்தன் அகர்வால் பொறுப்பேற்க உள்ளதாக, தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
'பிக்கி' எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற் கூட்டமைப்பின் 2024 - 25ம் ஆண்டுக்கான தலைவராக, இமாமி நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஹர்ஷவர்தன் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ள பிக்கியின் 97வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் தற்போது பிக்கியின் மூத்த துணைத் தலைவராக உள்ள அகர்வால், தலைவராக பொறுப்பேற்கிறார்.