புதிதாக 150 பொருட்களுக்கு பி.ஐ.எஸ்., தர கட்டுப்பாடு
புதிதாக 150 பொருட்களுக்கு பி.ஐ.எஸ்., தர கட்டுப்பாடு
ADDED : பிப் 05, 2025 11:47 PM

புதுடில்லி:வீட்டு உபயோக பொருட்கள், ஸ்டீல் உட்பட 150 பொருட்களின் உற்பத்தியில், தரக் கட்டுப்பாடு விதிகளை கடைப்பிடிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இது குறித்து, பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பு கூறியிருப்பதாவது:
பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்கான கட்டாய தரக் கட்டுப்பாடு அளவீடுகளில் புதிதாக 150 பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கண்டிப்பான பாதுகாப்பு வழிமுறைகள், சிறப்பான தர நிலைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், வீட்டு உபயோக பொருட்கள், தொழிற்சாலை கருவிகள், ஸ்டீல் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்த இந்த பொருட்களுக்கான கட்டாய தரக் கட்டுப்பாடு, வெவ்வேறு தேதிகளில் அமலுக்கு வரும்.இவ்வாறு பி.ஐ.எஸ்., தெரிவித்து உள்ளது.
முக்கிய பொருட்கள்
வாக்கும் கிளீனர்
ஸ்டீல் பாத்திரம்
மசாஜ் கருவி
கரும்பலகை
பிளைவுட்
மரக்கதவு
இரும்பு கம்பி
வாட்டர் ஹீட்டர்