உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 09, 2026 06:50 AM

அ நிறம் | அளவு
சென்னை: போர்டு மோட்டார் நிறுவனத்தின் போர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ், கோவை எஸ்.வி.பி., டெக் பார்க்கில், உலகளாவிய திறன் மையத்தை அமைத்துள்ளது. இதை, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா நேற்று தொடங்கி வைத்தார்.
மொத்தம், 82,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த மையம் உயர் மதிப்புள்ள வணிகம், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், புத்தாக்கம் சார்ந்த சேவைகள் வாயிலாக போர்டு நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும். இந்த உலகளாவிய மையத்தால், 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
