ADDED : அக் 13, 2024 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் விமான நிறுவனம், 17,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஓர்ட்பெர்க் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்ட நிதியிழப்பை சீரமைக்கும் நோக்கில் எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளோம். அதனடிப்படையில் வரும் மாதங்களில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் தோராயமாக 10 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.