தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/கட்டட கழிவுகளில் இருந்து கட்டுமான பொருட்கள்: சென்னை ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பம்

கட்டட கழிவுகளில் இருந்து கட்டுமான பொருட்கள்: சென்னை ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பம்

கட்டட கழிவுகளில் இருந்து கட்டுமான பொருட்கள்: சென்னை ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பம்


UPDATED : நவ 19, 2026 06:12 PM

ADDED : நவ 19, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 06:12 PM ADDED : நவ 19, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்டட கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து, மதிப்புக்கூட்டு கட்டுமான பொருட்களை தயாரிக்க, சென்னை சி.எஸ்.ஐ.ஆர்., கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கிய தொழில்நுட்பம், வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் நடைபெற்ற தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்ச்சியில், இத்தொழில்நுட்பம் தேசிய வாகன சோதனை ஓடுதள அமைப்பான 'நாட்ராக்ஸ்'க்கு வழங்கப்பட்டுள்ளது.

மாற்று மூலப்பொருட்கள்



இத்தொழில்நுட்பத்தில், இயற்கை கல் துகள்களுக்கு பதிலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டட கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் இருந்து செங்கற்கள், ஹாலோ பிளாக், பேவர் பிளாக் உள்ளிட்டவற்றை தயாரிக்க முடியும். இதன் வாயிலாக, இயற்கை வளங்களை சார்ந்திருப்பது குறையும்.

அதிகரிக்கும் தேவை



மத்திய அரசின் புதிய கட்டட கழிவு மேலாண்மை விதிகள், நடப்பாண்டு ஏப். 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.இதன்படி, 20,000 சதுர மீட்டர் மற்றும் அதற்கு அதிகமான கட்டுமான பரப்பளவு கொண்ட திட்டங்களில், நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் 5 சதவீத மறுசுழற்சி கட்டுமான பொருட்களை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2030–31ம் நிதியாண்டில் 25 சதவீதத்தை எட்டும்.

சிறுதொழில்களுக்கு வாய்ப்பு



கட்டட கழிவுகளை சேகரித்தல், தரம் பிரித்தல், அரைத்து ஜல்லி, மணல் போன்ற மூலப்பொருட்களாக மாற்றுதல் என, பல்வேறு நிலைகளில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் ஈடுபட வாய்ப்புள்ளது.மேலும், பதிவு பெற்ற மறுசுழற்சி நிறுவனங்கள், 'இ.பி.ஆர்.,' எனப்படும் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ்களை விற்பனை செய்வதன் வாயிலாகவும் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us