தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/தொழில் காலண்டர்

தொழில் காலண்டர்

தொழில் காலண்டர்


UPDATED : அக் 28, 2026 02:47 PM

ADDED : அக் 28, 2026 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 02:47 PM ADDED : அக் 28, 2026 02:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நிதியுதவி, கண்டுபிடிப்பு போட்டி, தொழில் பயிற்சி... தவறவிடக்கூடாத தேதிகள்!

அக். 31 | ஹேக்கத்தான் நிதியுதவி



முதல் தவணை நிதி கோரிக்கைக்கு கடைசி நாள்

மத்திய அரசின் 'எம்.எஸ்.எம்.இ., ஐடியா ஹேக்கத்தான் 5.0' திட்டத்தில் தேர்வான புதுமை முயற்சிகளுக்கான முதல் தவணை நிதி கோரிக்கையை சமர்ப்பிக்க, அக்டோபர் 31 கடைசி நாள்.

யாருக்கு: ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட திட்டங்களுக்கான நிதி கோரிக்கைகளை சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டுமே இந்த காலக்கெடு பொருந்தும். புதிய விண்ணப்பங்களுக்கான அறிவிப்பு அல்ல.

இணையதளம்: my.msme.gov.in/inc

நவ. 6 | புதுமை கண்டுபிடிப்பு போட்டி



சிறந்த கண்டுபிடிப்புக்கு ரூ.10 லட்சம் பரிசு

'சேவா பர்ஸ்ட் இன்னோவேஷன் சேலஞ்ச்' போட்டியில், பள்ளி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் புதுமையான தீர்வுகளை சமர்ப்பிக்கலாம்.

வேளாண்மை, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, உற்பத்தி உள்ளிட்ட ஐந்து துறைகளில் யோசனைகளை வழங்கலாம். போட்டியின் மூன்று பரிசுப் பிரிவுகளிலும் முதல் பரிசாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

தகவல்: மாணவர்கள் நேரடியாக பதிவு செய்ய முடியாது. கல்வி நிறுவனங்கள் நியமிக்கும் ஒருங்கிணைப்பாளர் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: நவ. 6.

இணையதளம்: sevafirst.mic.gov.in

நவ. 10 | வேளாண் தொழில்முனைவோர் பயிற்சி



வேளாண் பொருட்களின் மதிப்பை உயர்த்த பயிற்சி

தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனமான, 'மேனேஜ்' சார்பில், வேளாண் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் தொடர்பான ஐந்து நாள் பயிற்சி நடத்தப்படுகிறது.

வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல், சந்தை வாய்ப்புகளை கண்டறிதல், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை தொழில் நிறுவனங்கள் மற்றும் சந்தைகளுடன் இணைத்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

யாருக்கு: வேளாண் துறை அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள், வேளாண் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சேர்ந்தவர்கள்.

பதிவுக்கு கடைசி நாள்: நவ. 10.

இணையதளம்: www.manage.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us