அமெரிக்க வரி விதிப்பு பிரச்னை வழிகாட்ட வர்த்தக உதவி மையம்
அமெரிக்க வரி விதிப்பு பிரச்னை வழிகாட்ட வர்த்தக உதவி மையம்
ADDED : ஏப் 13, 2025 01:21 AM

புதுடில்லி:அமெரிக்க அரசின் புதிய வரி விதிப்புகளால் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலில், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்களுக்கு உதவ, மத்திய வர்த்தக அமைச்சர் 'ஹெல்ப் டெஸ்க்' எனப்படும், உதவிக்கான சேவையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச வரிவிதிப்பு மற்றும் வர்த்தக உதவி மையம் ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அன்னிய வர்த்தக பொது இயக்குனரகமான டி.ஜி.எப்.டி., அறிவித்துள்ளது.
அமெரிக்க வரி விதிப்பு மாற்றங்களைத் தொடர்ந்து, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்டுஉள்ள சிக்கலான சூழலில், வர்த்தக பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது, எப்படி சுமூகமாக வர்த்தகத்தை தொடர்வதுஎன, இந்த பிரிவு வழிகாட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரி விதிப்புக்குப் பிறகு, சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இறக்குமதி கூடுதல் வரி மற்றும் ஏற்றுமதி தொடர்பான சவால்களில் வணிகர்களுக்கு உடனுக்குடன் தீர்வளிக்க இந்த மையம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வரி மாற்றங்கள், விதிமுறைகள் குறித்து, இந்த உதவி மையத்தில் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் விளக்கம் பெறலாம்

