தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ தொழில் தொடங்க 21 நாட்களுக்குள் அனுமதி; உருவாகிறது அரசு இணையதள மென்பொருள்

 தொழில் தொடங்க 21 நாட்களுக்குள் அனுமதி; உருவாகிறது அரசு இணையதள மென்பொருள்

 தொழில் தொடங்க 21 நாட்களுக்குள் அனுமதி; உருவாகிறது அரசு இணையதள மென்பொருள்


ADDED : செப் 26, 2026 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அனைத்து அரசு துறைகளின் அனுமதிகளையும் ஒற்றைச்சாளர இணையதளத்தின் வாயிலாக 21 நாட்களுக்குள் வழங்குவதற்கான புதிய மென்பொருள் ஒன்றை, வழிகாட்டி நிறுவனம் உருவாக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியம், டி.டி.சி.பி., உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் அனுமதி பெ ற வேண்டும் . பல அரசு துறைகளின் அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் பெற்று தரும் பணியை, தொழில் துறையின் கீழ் செயல்படும் வழிகாட்டி நிறுவனம் மேற்கொள்கிறது. சில து றைகளில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதனால் அனுமதி தர தாமதம் செய்யப்படுகிறது. இது, புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தொழில் தொடங்குவதற்கான அனைத்து அனு மதிகளையும், 21 நாட்களுக்குள் வழங்க த.வெ.க., அரசு முடிவு செய்தது .

இதை யடுத்து, அனைத்து விண்ணப்பங்களையும் ஒற்றைச்சாளர இணையதளத்தில் மட்டுமே பெற்று, 21 நாட்களுக்குள் அனுமதி தரும் வகையில் அந்த இணையதளம் மேம்படுத்துவதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us