தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/செமிகண்டக்டர் திட்டங்களில் களமிறங்கும் கேனான்

செமிகண்டக்டர் திட்டங்களில் களமிறங்கும் கேனான்

செமிகண்டக்டர் திட்டங்களில் களமிறங்கும் கேனான்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டில் உருவாகி வரும் செமிகண்டக்டர் உற்பத்தி திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்க, ஜப்பானை சேர்ந்த கேனான் நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்தியா செமிகண்டக்டர் மிஷன் திட்டத்தின் கீழ், சிப் உற்பத்தி, அசெம்ப்ளி மற்றும் சோதனை உள்ளிட்ட பிரிவுகளில், ஏறத்தாழ 12 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ், மைக்ரான், சி.ஜி.பவர்–ரெனசாஸ் மற்றும் கெய்ன்ஸ் செமிகான் உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், கேனான் இந்தியாவின் முக்கிய செமிகண்டக்டர் திட்டங்களுடன் ஏற்கனவே பேச்சு நடத்தியுள்ளது.

கேனான் இந்தியா தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தோஷியாகி நோமுரா கூறியதாவது:

சிப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் லித்தோகிராபி இயந்திரங்களை இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். திட்டங்கள் முன்னேறும் நிலையில், சிப் உற்பத்தி நிறுவனங்களுக்கு 24 மணி நேர தொழில்நுட்ப உதவி வழங்க தனி சேவை மையங்களையும் அமைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us