தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/வாடிக்கையாளர் தேவைக்கேற்ப புதிய பம்புகள் அறிமுகம்!

வாடிக்கையாளர் தேவைக்கேற்ப புதிய பம்புகள் அறிமுகம்!

வாடிக்கையாளர் தேவைக்கேற்ப புதிய பம்புகள் அறிமுகம்!


UPDATED : அக் 08, 2026 09:19 AM

ADDED : அக் 05, 2026 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 09:19 AM ADDED : அக் 05, 2026 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தொடர்ந்து அறிந்து, அதற்கேற்ப புதிய வகை பம்புகளை அறிமுகப்படுத்தி வருவதாக பெஸ்ட் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீப்ரியா கவுரிசங்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சந்தையில் வாடிக்கையாளர்களின் தேவைகள் தொடர்ந்து மாறி வருகின்றன. அவற்றை அறிந்து, குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற வகையில் பம்பிங் சொல்யூசன்ஸ் வழங்குவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதன் அடிப்படையில், குறைந்த மின்னழுத்தத்திலும் சிறப்பாக இயங்கக்கூடிய, அதிக ஆழத்திலும் திறம்பட செயல்படும் 'சப்மெர்சிபிள்' பம்ப்ஸ் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஆழ்துளைக் கிணறு பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அதிக திறன் கொண்ட பம்புகளை வழங்கி வருகிறோம். இதன் மூலம் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு தேவையான நீர் இறைக்கும் தீர்வுகளை வழங்க முடிகிறது.

தற்போது சோலார் பம்பிங் சிஸ்டம்ஸ் மீதான ஆர்வமும், தேவையும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு, வீடுகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற அனைத்து வகையான சாலார் பம்பிங் சொல்யூசன்ஸ்களையும் வழங்கி வருகிறோம்.

மேலும், தொழிற்சாலைகள் மற்றும் கட்டடங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான வாட்டர் மேனேஜ்மெண்ட் பம்ப்ஸ் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்டஸ்டிரியல் அப்ளிகேசன்ஸ் மற்றும் பில்டிங் அப்ளிகேசன்ஸ் ஆகியவற்றுக்குத் தேவையான பம்புகளையும் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப வடிவமைத்து வழங்கி வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் தேவையை மையமாகக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதுடன், தயாரிப்புகளின தரம், செயல்திறன் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையை உறுதி செய்வதே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us