செங்கடல் பிரச்னை காரணமாக சரக்கு ஏற்றுமதி நிறுத்தம்
செங்கடல் பிரச்னை காரணமாக சரக்கு ஏற்றுமதி நிறுத்தம்
UPDATED : ஜன 19, 2024 05:07 PM
ADDED : ஜன 17, 2024 07:26 AM
புதுடில்லி : செங்கடல் பிரச்னை காரணமாக, கப்பல் செலவுகள் அதிகரித்து வருவதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் சரக்குகளை ஏற்றுமதி செய்யாமல், நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கடல் பகுதி, உலக வர்த்தகத்தில் 12 சதவீத பங்கு வகிக்கிறது. மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையேயான வர்த்தகத்தில், இது 80 சதவீத பங்கை வகிக்கிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்கள், செங்கடல் வழியாக ஏற்றுமதியை தொடர்ந்து நிறுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது இந்திய ஏற்றுமதியாளர்களும், தங்கள் சரக்குகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வர்த்தக செயலர் சுனில் பர்த்வால் தெரிவித்துள்ளதாவது: ஏற்றுமதியாளர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக, ஏற்றுமதி கடன் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டாம் என, ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலிடம் அரசு கேட்டு கொண்டுள்ளது.மேற்கத்திய நாடுகளில் தேவை அதிகரித்தால், இந்திய ஏற்றுமதியும் அதிகரிக்கும். தற்போது இந்தியாவின் போட்டி நாடுகளும், செங்கடல் பிரச்னையால் அதிக செலவுகளை எதிர்கொள்கின்றன. இது, இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னை. இதுகுறித்து அனைவரும் கவலைப்படுகின்றனர்.இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.

