ADDED : மே 18, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான காசா கிராண்ட், புனே ரியல் எஸ்டேட் சந்தையில் நுழைவதாக, அந்நிறுவனத்தின் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விபரம் வருமாறு:
காசா கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனம், புனேவில் உள்ள அப்பர் காரடி மற்றும் வகேலாவின் முக்கிய பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது.
இங்கு 30 லட்சம் சதுர அடி பரப்பளவில், பிரீமியம் சொகுசு குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது.
நகரின் விரிவான உள்கட்டமைப்பு மாற்றம், மேம்பட்ட இணைப்பு மற்றும் சொகுசு குடியிருப்புகளை விரும்பும் மக்களுக்கான குடியிருப்புகளை வழங்கும் வகையில், காசா கிராண்ட் குடியிருப்பு திட்டங்களை வடிவமைத்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.