ADDED : நவ 01, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : மெத்தனால் உற்பத்திக்கான கிரியாஊக்கியை, தேசிய அனல்மின் நிறுவனமான என்.டி.பி.சி., உருவாக்கியுள்ளது. படிம எரிபொருளை எரித்து உருவாக்கப்படும் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியோகும் வாயுக்களை பயன்படுத்தி, மெத்தனால் தயாரிக்க இந்த கிரியாஊக்கி பயன்படும் என, மத்திய மின்சாரத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஐ.பி., எனப்படும் இந்திய பெட்ரோலிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து, இந்த கிரியாஊக்கி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கிரியாஊக்கி வாயிலாக உற்பத்தி செய்யப்படவுள்ள மெத்தனால், 99 சதவீதத்துக்கு மேல் தூய்மையானதாக இருக்கும் என்றும் மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.

