ADDED : மார் 17, 2025 12:32 AM

புதுடில்லி:தமிழகம் விதிக்கும் கூடுதல் கனிம வரி காரணமாக சிமென்ட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனிம உரிமைகள் மற்றும் கனிம வளம் மிக்க நிலங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அனுமதியளித்து, கடந்தாண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது.
இதையடுத்து தமிழக அரசு கனிம வளம் மிக்க நிலவரிச் சட்டம் 2024 ஐ அறிமுகப்படுத்தியது.
இச்சட்டத்தின் கீழ், சுண்ணாம்புக்கல்லுக்கு டன் ஒன்றுக்கு 160 ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. சிமென்ட் தயாரிப்பில் சுண்ணாம்புக்கல் முக்கிய மூலப் பொருளாகும்.
ஆகையால், தமிழக அரசின் கூடுதல் வரி சுமையால், அதிகரித்து வரும் செலவுகளை ஈடு செய்ய, தமிழகத்தில் சிமென்ட் விலைகள் பை ஒன்றுக்கு 8 முதல் 10 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.