மின்சார பஸ், லாரிக்கு மானியம் பெற மத்திய அரசு 6 மாத கால அவகாசம்
மின்சார பஸ், லாரிக்கு மானியம் பெற மத்திய அரசு 6 மாத கால அவகாசம்
ADDED : அக் 02, 2025 11:25 PM

புதுடில்லி, : மோட்டார்கள் இறக்குமதியை நிறுத்தி, உள்நாட்டில் தயாரித்த மோட்டார்களுடன் மின்சார பஸ், லாரிகளுக்கு பி.எம்., இ - டிரைவ் திட்டத்தில் மானியம் பெற, மத்திய அரசு ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
முன்னதாக நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரை இருந்த காலக்கெடு, தற்போது அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்சார வர்த்தக வாகனங்களில் பயன்படுத்தப்படும் அரிய வகை காந்தங்களை கொண்ட மோட்டார்கள் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம், இந்த மோட்டார் இறக்குமதிக்கு அந்நாடு கட்டுப்பாடு விதித்தது.
இதனால், மின்சார வாகனங்களின் உற்பத்தி உள்நாட்டில் பாதிக்கப்பட்டன.
இதனால், சீனாவை சாராமல், அதை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அடுத்த ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டில் உற்பத்தியாகும் மோட்டார்களை பயன்படுத்தினால் மட்டுமே, மின்சார லாரிகள் மற்றும் பஸ்களுக்கு மானியம் கிடைக்கும்.
மின்சார வாகனங்களுக்கு, பி.எம்., இ - டிரைவ் திட்டத்தின் கீழ், ரூ.10,900 கோடி நிதி ஒதுக்கீடு
இ தில், 7.50 டன் வரையிலான லாரிகளுக்கு, 2.70 லட்சம் ரூபாயும், 7.50 முதல் 12 டன் லாரிகளுக்கு 3.60 லட்சம் ரூபாயும் மானியம்
அதிகபட்சமாக, 2 கோடி ரூபாய் வரை விலை உள்ள மின்சார பஸ்களுக்கு மானியம் கிடைக்கிறது