உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: கோதுமை, சோயாபீன் மற்றும் மக்காச்சோளத்தின் விலைகள் கடந்த செப்., காலாண்டில் சர்வதேச அளவில் கணிசமாக உயர்ந்துள்ளன.
இருப்பினும், பயிர் பாதுகாப்பு ரசாயனங்களுக்கான தேவை மந்தமாகவே நீடிப்பதாக ‘ஜெப்ரீஸ்’ நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருங்கடல் பகுதி வினியோக தொடர் பாதிப்பு மற்றும் மேற்காசிய மோதல்கள் காரணமாக, செப்., காலாண்டில் கோதுமை விலை 30 சதவீதமும், சோயாபீன்ஸ் 22 சதவீதமும், மக்காச்சோளம் 19 சதவீதமும் உயர்ந்துள்ளன.
உலகின் முன்னணி ஏற்றுமதியாளரான சீனாவின் பயிர் பாதுகாப்பு ஏற்றுமதி அளவு 15 சதவீதம் சரிந்துள்ளது சர்வதேச அளவில் தேவை குறைந்துள்ளதை உணர்த்துகிறது என் று அந்த நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
