பட்டாசு பொது வசதி மையம் ‘டெண்டர்’ கோரியது ‘டிட்கோ’
பட்டாசு பொது வசதி மையம் ‘டெண்டர்’ கோரியது ‘டிட்கோ’
UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 10:54 PM

சென்னை: பட்டாசு தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த, சிவகாசியில் அமைக்கப்பட உள்ள, பொது வசதி மையத்திற்கு, ‘டிட்கோ’ நிறுவனம், ‘டெண்டர்’ கோரியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில், 1,200 பட்டாசு தொழிற்சாலைகள் வாயிலாக, 3 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் வியாபாரம் நடக்கிறது.
நம் நாட்டில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்யுமாறு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, பட்டாசு தொ ழிலாளர்களின் பாதுகாப்பு, தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவும், சிவகாசியில் வெடிபொருள் பொ து வசதி மையம் அமைக்க, ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறு வனம் முடிவு செய்துள்ளது.
அதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, ‘டிட்கோ’ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
