தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஆடை ஏற்றுமதி 23% அதிகரிப்பு வாய்ப்புகளாக மாறிய சவால்கள்

ஆடை ஏற்றுமதி 23% அதிகரிப்பு வாய்ப்புகளாக மாறிய சவால்கள்

ஆடை ஏற்றுமதி 23% அதிகரிப்பு வாய்ப்புகளாக மாறிய சவால்கள்


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இருந்த சவால்கள், வாய்ப்பாக மாறியுள்ளதால், செப்டம்பர் மாத ஏற்றுமதி 22.86 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் வரி உயர்வு பிரச்னைக்கு பின், இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்ற சர்வதேச சந்தைகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகம் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.

வழக்கமான வாடிக்கையாளருடன் புதிய வர்த்தகர்களும் இந்தியாவை தேடி வந்து கொண்டிருக்கின்றனர். நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்கள் ஏற்றுமதி மந்தமாக இருந்தது. அடுத்த மூன்று மாதங்களில் வர்த்தகம் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2025 செப்டம்பரில் 8,810 கோடி ரூபாயாக இருந்த ஆடை ஏற்றுமதி, கடந்த செப்டம்பரில் 10,824 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 22.86 சதவீத வளர்ச்சி ஆகும்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 69,310 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 67,003 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்தது. கடந்த மூன்று மாதங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் நடப்பு நிதியாண்டில், 3.43 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், “பிரிட்டன் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு அந்நாட்டுடனான வர்த்தகம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் சாதகமாக மாறியுள்ளதால் வர்த்தகர்கள், இந்தியாவை தேடி வருகின்றனர். அமெரிக்க வர்த்தகமும் அதிகரித்துள்ளது.

“வங்கதேசம் அல்லது சீனாவுக்கான ஆர்டர்களில் 1 சதவீதம் இந்தியாவுக்கு திரும்பினால் கூட, நமது ஆடை ஏற்றுமதி ஒரே ஆண்டில் அபார வளர்ச்சி பெறும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us