ADDED : பிப் 08, 2025 09:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:உலகளவில் தகரத்துக்கான தேவை அதிகரித்து வருவதுடன், வினியோக நெருக்கடி காரணமாக, அதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளில் காணாத அளவுக்கு கடந்த மாதம் தகரத்தின் விலை அதிகரித்த நிலையில், புதிய சுரங்க உரிமம், புத்தாண்டால் உற்பத்தி தாமதம் காரணமாக, இந்தோனேஷிய ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது.
மேலும், சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, தகரத்தை உருக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளோர் நீண்ட விடுமுறையில் சென்றதால், உற்பத்தி தாமதமாகக் கூடும்.
இதனால் ஏற்படும் வினியோக நெருக்கடி காரணமாக, தகரம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகரத்துக்கான சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

