'ரூ.13 லட்சம் கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து' சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
'ரூ.13 லட்சம் கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து' சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ADDED : நவ 16, 2025 01:28 AM
விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேசத்தில், பல்வேறு துறைகளில் 13 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாடு நேற்று நிறைவடைந்தது.
இதில் பேசிய சந்திரபாபு நாயுடு, இந்த 13 லட்சம் கோடி ரூபாயுடன் சேர்த்து, கடந்த 16 மாத கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மாநிலத்தில் மொத்தம் 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வரும் 2047ம் ஆண்டுக்குள் ஆந்திராவை, 2.40 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே அரசின் இலக்கு என தெரிவித்த அவர், தனி நபர் வருமான சராசரியை கிட்டத்தட்ட, ஆண்டுக்கு 3.70 லட்சம் ரூபாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மாநாட்டில் 650 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 3,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வணிக நிறுவனங்களுக்கு இடையே 700 சந்திப்புகள் நடைபெற்றன.

