உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களை உருவாக்கும் செட்டிநாடு ஹரிஸ்ரீ பள்ளி
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களை உருவாக்கும் செட்டிநாடு ஹரிஸ்ரீ பள்ளி
UPDATED : அக் 12, 2026 06:13 PM
ADDED : அக் 12, 2026 05:24 PM

கோவை: இன்றைய உலகில் கல்வி என்பது பாடப்புத்தக அறிவுடன் மட்டும் நின்றுவிடாமல், மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல், தன்னம்பிக்கை, வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வளர்ப்பதாக அமைய வேண்டும். இதனை நோக்கமாகக் கொண்டு, கேம்பிரிட்ஜ் கல்வி அணுகுமுறையின் மூலம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
90 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பாரம்பரியம் கொண்ட செட்டிநாடு கல்வி நிறுவனங்கள், சென்னை, கரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகளையும், மருத்துவம், பொறியியல், பிசியோதெரபி உள்ளிட்ட துறைகளில் உயர்கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றன.
ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொண்டு, கல்வியுடன் வாழ்க்கைத் திறன்கள், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சுயமாகச் சிந்திக்கும் திறன் ஆகியவை வளர்க்கப்படுகின்றன. நவீன விளையாட்டு வசதிகளான பிக்கிள்பால், கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் ஆகியவற்றுடன், கணிதம், கணினி, அறிவியல் ஆய்வகங்களும் மாணவர்களின் செயல்வழிக் கற்றலுக்கு உதவுகின்றன.
உடல்தகுதி, சமையற்கலை, எழுத்தாற்றல் உள்ளிட்ட சங்கங்கள், மூலிகைத் தோட்டம், உரக்குழி, மறுசுழற்சி செயல்பாடுகள் மூலம் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வளர்க்கப்படுகிறது. பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், இசைக்கருவி, பயிற்சி, யோகா போன்ற வகுப்புகளின் மூலம் மாணவர்களின் கலைத்திறன், உடல்நலம், மன ஒருமுகப்படுத்துதல் போன்றவை மேம்படுத்தப்படுகிறது.
நவீன கற்பித்தல் அணுகுமுறைகளையும் மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் முறைகளையும் பயன்படுத்தி, குழந்தைகள் கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், சுயமாகச் சிந்திக்கவும், தங்களது திறன்களை வெளிப்படுத்தவும் ஆசிரியர்கள் வழிகாட்டுகின்றனர்.
கல்வி, இயற்கை, கலை, விளையாட்டு, தனிப்பட்ட அக்கறை என அனைத்தையும் ஒருங்கிணைத்து, தன்னம்பிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதில் செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயம் பெருமிதத்துடன் செயல்படுகிறது.
