முதல்வரின் பிரிட்டன், ஜெர்மனி பயணம் 15,516 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு
முதல்வரின் பிரிட்டன், ஜெர்மனி பயணம் 15,516 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு
UPDATED : செப் 07, 2025 01:59 AM
ADDED : செப் 07, 2025 01:44 AM

சென்னை:முதல்வர் ஸ்டாலினின் பிரிட்டன் மற்றும் ஜெர்மனி பயணத்தால், தமிழகத்திற்கு, 15,516 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
தமிழகத்தை, 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
அதன்படி, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு, அந்நாடுகளுக்கு எட்டு நாட்கள் பயணமாக, ஆக., 30ல்சென்றது.
இந்த பயணத்தால், தமிழகம் பெற்ற மொத்த முதலீடு, 15,516 கோடி ரூபாய். இதன் வாயிலாக, 17,613 நபருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
![]() |
பிரிட்டன் முதலீட்டாளர்கள் சந்திப்புகளுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு ஜெர்மனியிடம் இருந்து, 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 7,020 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இதன் வாயிலாக, 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை, விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரயில்வே, ஆட்டோமோட்டிவ், மின்னணுவி யல் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியது. நாளை காலை, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு சென்னை திரும்புகிறது.