ADDED : அக் 26, 2024 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்கானிஸ்தானின் வளங்களை பயன்படுத்திக்கொள்ள, அந்நாட்டுடன் நெருக்கமாகும் நோக்கத்தில், அதனுடன் தடையற்ற வர்த்தக தொடர்பை ஏற்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான் கைப்பற்றியதில் இருந்தே, அந்நாட்டுடன் உறவை மேம்படுத்த சீனா ஆர்வம் காட்டி வருகிறது.
தற்போது கட்டுமானம், எரிசக்தி, நுகர்வோர் சேவை உள்ளிட்ட துறைகளில், வரியற்ற வர்த்தக தொடர்பை ஏற்படுத்த தலிபான் அரசுக்கு அனுமதி வழங்க உள்ளதாக, சீன துாதர் தெரிவித்தார். தலிபான் அரசை, மற்ற நாடுகளைப் போலவே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காத சீனா, தடையற்ற வர்த்தக அனுமதி வாயிலாக, ஆப்கானிஸ்தானின் லித்தியம், தாமிரம் போன்ற கனிமவளங்களை பயன்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது.