சீனாவால் வெள்ளி சந்தையில் பதற்றம்:உலக வினியோக தொடர் பாதிக்கும் அபாயம்
சீனாவால் வெள்ளி சந்தையில் பதற்றம்:உலக வினியோக தொடர் பாதிக்கும் அபாயம்
ADDED : ஜன 02, 2026 02:02 AM

புதுடில்லி:வெள்ளியை ஏற்றுமதி செய்வதற்கு சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதனால், சாதாரண உலோகம் என்பதில் இருந்து, அரியவகை கனிமங்கள் என்ற பிரிவில் வெள்ளியும் சேர்ந்துள்ளது.
இது உலகளாவிய வெள்ளி வினியோக தொடரில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபரில் சீன வர்த்தகத்துறை அறிவித்த இந்த கட்டுப்பாடுகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. இதனால், வெள்ளியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது.
வெள்ளி ஏற்றுமதிக்கு ஒட்டுமொத்த தடை அறிவிக்கப்படா விட்டாலும், 44 நிறுவனங்களுக்கு மட்டும் ஏற்றுமதி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இது, அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் ராணுவ தளவாட வினியோக தொடரில், பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் சீனப்பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் வரிக்கு பதிலடியாக, இந்நடவடிக்கை அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
இதனால், சாதாரண பண்டகமாக வணிகமான நிலையில் இருந்து, அரிய வகை உலோகமாக வெள்ளியை தரம் உயர்த்தும் வகையில், சீனாவின் இந்நடவடிக்கை
அமைந்துள்ளது.
'இது நல்லதல்ல. வெள்ளி பல்வேறு தொழில் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் நடவடிக்கை பல பாதிப்புகளை ஏற்படுத்தும்' - எலான் மஸ்க், டெஸ்லா சி.இ.ஓ.,

