ADDED : ஏப் 13, 2025 12:49 AM

புதுடில்லி:சீனாவில் இருந்து இந்தியாவுக்கு, அன்னிய நேரடி முதலீடுகளை ஊக்குவிக்கும் திட்டமில்லை என, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அன்னிய நேரடி முதலீடுக்கு, மத்திய அரசின் அனுமதி பெறுவது, கடந்த 2020 ஏப்ரலில் இருந்து கட்டாயமாகும்.
தற்போது பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில், அமெரிக்கா - சீனா இடையே மோதல் முற்றி வரும் நிலையில், இந்தியா வுக்கான சீனத் துாதரகத்தின் செய்தி தொடர்பாளர் யூ ஜிங், தனது எக்ஸ் தளத்தில், 'அமெரிக்க வரி விதிப்பின் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், இரண்டு மிகப்பெரும் வளரும் நாடுகள் ஒன்றிணைந்து, சவால்களை கடக்க வேண்டும்.
'இந்தியா - சீனா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, பரஸ்பர நன்மையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அன்னிய நேரடி முதலீடுகளை ஊக்குவிக்கும் திட்டமில்லை என, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

