சின்மயா: பண்பாட்டு விழுமியங்களில் வேரூன்றிய நவீன கல்வி
சின்மயா: பண்பாட்டு விழுமியங்களில் வேரூன்றிய நவீன கல்வி
UPDATED : அக் 13, 2026 05:29 PM
ADDED : அக் 13, 2026 05:26 PM

சின்மயா வித்யாலயா பள்ளிகள் வடவள்ளி மற்றும் ஆர். எஸ்.புரம் கிளைகள், நவீன கல்வியையும் காலத்தால் அழியாத விழுமியங்களின் ஒரு தனித்துவமான கல்வியை வழங்கி வருகின்றன. அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம், கலாசாரத்திலும் திறமையிலும் வேரூன்றிய எதிர்கால தலைவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம்.
சுவாமி சின்மயானந்தாவின் போதனைகளால் வழிநடத்தப்படும் இப்பள்ளிகள், அறிவை வழங்குவது மட்டுமல்ல, நற்பண்புகளை உருவாக்குவது’ என்ற கொள்கையில் செயல்படுகின்றன என்கிறார், தாளாளர் நிர்மல் குமார் ஜெயின்.
எங்கள் மாணவர்கள் பாடங்களை மட்டும் கற்பதில்லை, வாழ்கை திறன்களையும் மதிப்புகளையும் கற்கிறார்கள்: என்கிறார் ஆர்.எஸ்.புரம் கிளையின் தாளாளர் வேணுகோபால். இது நவீன கல்வியுடன் மெய்யறிவை இணைக்கும் எங்கள் தனித்துவமான பலம் என்கிறார்.
சர்வதேச தரத்திற்கு இணையான வசதிகளுடன் ஏஐ ஆய்வகங்கள், ரோபோடிக்ஸ், ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் பரந்த விளையாட்டு மைதானங்கள் உள்ளன.கல்விக்கு அப்பாற்பட்ட திறன்களான யோகா, தியானம், இசை , நடனம் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மூலம் மாணவர்களின் மனநலம் மற்றும் முழுமையான வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.
‘சின்மயா வித்யாலயாவின் கல்விப் பயணம் தொடர்ச்சியான வளர்ச்சியின் பயணம். மாணவர்களை உலகளாவிய வாய்ப்புகளுக்கு தயார்படுத்துவதும்,இந்திய மாண்புகளை வேரூன்றச் செய்வதும் தான் எங்கள் நோக்கம்' என்கின்றனர் பள்ளி முதல்வர்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக நவீன கல்வி மற்றும் காலத்தால் அழியாத பண்பாட்டு விழுமியங்களின் அடையாளமாக இப்பள்ளிகள் திகழ்கிறது.
