தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/கேரளத்தில் தேங்காய் பூங்கா

கேரளத்தில் தேங்காய் பூங்கா

கேரளத்தில் தேங்காய் பூங்கா


ADDED : செப் 04, 2026 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: ஏற்றுமதிக்கு ஏற்ற தேங்காயை உற்பத்தி செய்யவும், மதிப்பு கூட்டவும், தேங்காய் வர்த்தகத்தில் முதலீட்டை அதிகரிக்கவும் தேங்காய் பூங்கா அமைக்கப்படும் என கேரள முதல்வர் சதீசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: வரலாற்று ரீதியாக கேரளம் தேங்காய் சாகுபடியில் முன்னோடியாக உள்ளது. ஆனால், உற்பத்தியில் பின்தங்கியுள்ளது. மாநிலத்தின் தேங்காய் துறையை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு தேங்காய் பூங்கா திட்டம் உதவும். தேங்காயை நவீன முறையில் பதப்படுத்தி, மதிப்பு கூட்டி உயர் தரத்தில் உருவாக்கினால் ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இந்த முயற்சி தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை வழங்க உதவும். தேங்காய் வர்த்தகத்தில் அதிக முதலீடு செய்யவும், சந்தை விரிவாக்கம் நடைபெறவும் பயன்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us