ADDED : செப் 04, 2026 07:20 AM

ஐ.ஓ.சி.,யிடம் இருந்துஆர்டர் பெற்றது ஐனாக்ஸ்
ஐனாக்ஸ் விண்ட் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடமிருந்து 100 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்கான 755 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. அதன்படி, முழு திட்டத்தையும் செயல்படுத்துவதுடன், மின் உற்பத்தி துவங்கிய பின் 10 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்லாரிகளை அதிகரிக்கஅல்ட்ராடெக் திட்டம்
நம் நாட்டு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை மின்சாரத்திற்கு மாற்றி வருவதால், 2026 - 27 நிதியாண்டில் கிட்டத்தட்ட 2,000 மின்சார கனரக லாரிகள் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் மட்டும் 2026 டிசம்பருக்குள் 600க்கும் மேற்பட்ட மின்சார லாரிகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவசாய உபகரணங்களுக்கு யூனியன் வங்கி கடன்
வி.எஸ்.டி., டில்லர்ஸ் டிராக்டர்ஸ் நிறுவனம், விவசாய உபகரணங்கள் வாங்குவதற்கான சில்லரை கடன் வசதியை வழங்க யூனியன் வங்கி ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டிராக்டர்கள், பவர் டில்லர்கள், பவர் ரீப்பர்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த கடன் வசதி கிடைக்கும். நாடு முழுதும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட டீலர்கள் வாயிலாக விவசாயிகள் கடன் பெறலாம்.
ஐ.ஓ.சி.,யிடம் இருந்து ஆர்டர் பெற்றது ஐநாக்ஸ்
ஐநாக்ஸ் விண்ட் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடமிருந்து 100 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்கான 755 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. அதன்படி, முழு திட்டத்தையும் செயல்படுத்துவதுடன், மின் உற்பத்தி துவங்கிய பின் 10 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் லாரிகளை அதிகரிக்க அல்ட்ராடெக் திட்டம்