UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 11:17 PM

கொச்சி: கடந்த 2025 – 26 நிதியாண்டில், நம் நாட்டின் கயிறு பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு 52 சதவீதம் உயர்ந்து 6,614 கோடி ரூபாயாக இருந்தது எனவும், ஏற்றுமதி அளவு 12 சதவீதம் உயர்ந்து 15.09 லட்சம் டன்னாக இருந்தது எனவும் கயிறு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
உலக அளவில் கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு நம் நாடு பங்களிக்கிறது. கடந்த நிதியாண்டில் தரைவிரிப்பு ஏற்றுமதி மதிப்பு 10.40 சதவீதமும் தென்னை நார்க்கட்டி 72.30 சதவீதமும் உயர்ந்துள்ளது. மொத்த ஏற்றுமதியில் இந்த இரண்டு பொருட்களும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
கயிறு பொருட்கள் ஏற்றுமதியில் சீனா முதல் இடத்திலும், அடுத்து அமெரிக்காவும், தொடர்ந்து நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், பெரு உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. கயிறு பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து நேர்மறையான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கான ஆர்டர்களும் வர தொடங்கியுள்ளன. கயிறு பொருட்களுக்கான உள்நாட்டு தேவையும் அதிகமாக உள்ளது. ஏற்றமதிக்கான மூலப்பொருட்களும் போதுமான அளவில் உள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
