ADDED : நவ 04, 2024 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை ; வர்த்தக வாகன விற்பனை கடந்த சில மாதங்களாகவே, சராசரியாக 10 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்து வந்தது. பண்டிகை மாதமான அக்டோபரில், இதன் விற்பனை மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆயினும் பெரிய அளவில் ஏற்றமின்றி ஆறுதல் தரும் வகையில், 0.95 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், 86,215 வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் 87,039 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களை தவிர, மற்ற நிறுவனங்கள் அனைத்தும், விற்பனையில் சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக, மஹிந்திரா நிறுவன விற்பனை வளர்ச்சி 12.04 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதே சமயம், அசோக் லேலாண்ட் நிறுவனம், 10.74 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.