கமாடிட்டி: கச்சா எண்ணெய் விலையில் அதிகரித்த அழுத்தம்
கமாடிட்டி: கச்சா எண்ணெய் விலையில் அதிகரித்த அழுத்தம்
ADDED : அக் 30, 2025 02:23 AM

கச்சா எண்ணெய்
விலையில் அதிகரித்த அழுத்தம்
ச ர்வதேச சந்தையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய் 64.03 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டது.
தென்கொரியாவில், அமெரிக்கா--சீனா ஆகிய நாடுகளின் அதிபர்களின் சந்திப்பு கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதலுக்கு, பேச்சு வாயிலாக சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பது வர்த்தகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்ததால், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. எனவே, ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரோஸ்நெட், லுாக்ஆயில் ஆகியவை இந்த தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்பர்மேஷன் எனர்ஜி ஏஜென்சி தகவல்படி, இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில், நம் நாட்டில் தினசரி கச்சா எண்ணெய் இறக்குமதி 19 லட்சம் பேரல்கள் ஆகும். இது ரஷ்யாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் ஆகும்.
கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக், வரும் டிசம்பரில், தனது உற்பத்தி அளவுகளை உயர்த்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, எண்ணெய் விலையில் உள்ள அழுத்தம் மேலும் அதிகரித்தது.

