தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : ஜூன் 14, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாடா எலக்ட்ரானிக்ஸ்

ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸின் ஐபோன் உதிரிபாக ஆலை, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றி நிலத்தடி நீரை மாசுபடுத்துவதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், சீனாவுக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கிய உதிரிபாக மையமாக திகழும் இந்த ஆலைக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ்

அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் தனது வரலாற்று சிறப்புமிக்க ஐ.பி.ஓ., வெளியீட்டை நடத்தி முடித்துள்ளது. இதன் வாயிலாக, கிட்டத்தட்ட 7.13 லட்சம் கோடி ரூபாய் திரட்டி, 208 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்புடன், உலகின் டாப் 7 நிறுவனங்களின் பட்டியலில் அது இணைந்துள்ளது.

ஜே.எஸ்.டபிள்யு., எனர்ஜி

ஜே.எஸ்.டபிள்யு., எனர்ஜி நிறுவனம், மாருதி கிளீன் கோல் அண்டு பவர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை, 1,410 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது. இதன் வாயிலாக சத்தீஸ்கரில் உள்ள அந்நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலை ஜே.எஸ்.டபிள்யு., வசமாகும். 2030க்குள், 30 ஜிகாவாட் உற்பத்தி என்ற நிறுவன இலக்கை எட்டவும் இது உதவும்.

ஆந்த்ரோபிக்

அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் நிறுவனம், தனது அதிநவீன ஏ.ஐ., மாடல்களான 'பேபிள் 5', 'மித்தோஸ் 5' ஆகியவற்றை முடக்கியுள்ளது. இவற்றை வெளிநாட்டினர் பயன்படுத்த அமெரிக்க அரசு தடை விதித்தது. அதையடுத்து, வெளிநாட்டு பயனர்களை நிகழ்நேரத்தில் பிரித்தறிய முடியாது என கூறி, இந்நிறுவனம் அவற்றை முழுமையாக முடக்கி வைத்துள்ளது.

ஏத்தர் எனர்ஜி

மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜியின் இயக்குநர் குழு, சந்தை விரிவாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 2,500 கோடி ரூபாய் மூலதனம் திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 1,500 கோடி ரூபாய், க்யு.ஐ.பி., எனப்படும் தகுதியுடைய நிறுவனங்களுக்கான பங்கு ஒதுக்கீடு வாயிலாக திரட்டப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us