தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : ஜூலை 12, 2026 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 02:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விலை உயர்வு அச்சத்தால் ஐபோன் 17க்கு தட்டுப்பாடு

ஐபோன் 17 மாடலின் புதிய வரத்து குறைந்துள்ளதாலும், அதன் விலை உயரும் என்ற அச்சத்தாலும் வாடிக்கையாளர்களிடையே அதற்கான தேவை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் விலை உயர்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், வாங்குபவர்கள் முண்டியடிப்பதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

'ஜென்சோல் நிறுவனத்தின் கடன் கணக்குகள் மோசடி'

ஜென்சோல் இன்ஜினியரிங் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜென்சோல் இ.வி., லீஸ் ஆகியவற்றின் கடன் கணக்குகள் மோசடியானவை என, பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ.டி.ஏ., அறிவித்துள்ளது. ஒழுங்குமுறை விதிமுறைகளின் கீழ், இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் இது தொடர்பான அறிக்கையை ஐ.ஆர்.இ.டி.ஏ, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கும் ஆதித்யா பிர்லா

ஆதித்யா பிர்லா குழுமம், ஒடிசாவில் உள்ள தனது அலுமினா சுத்திகரிப்பு ஆலையை விரிவுபடுத்துவதற்காக கிட்டத்தட்ட 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கை, இந்நிறுவனத்தின் உற்பத்தி திறனை பலமடங்கு உயர்த்தி, உள்நாட்டு உலோக சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்த உதவும்.



எக்ஸைடு ரூ.1,400 கோடி பெங்களூருவில் முதலீடு

எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பெங்களூருவில் உள்ள தனது லித்தியம் அயன் செல் உற்பத்தி ஆலைக்காக நடப்பு நிதியாண்டில், 1,400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு வாயிலாக, தனது உள்நாட்டு பேட்டரி தயாரிப்பு திறனை வெகுவாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



மின்சார வாகன பிரிவில் கிரீவ்ஸ் காட்டன் புதிய முதலீடு

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், தனது மின்சார வாகன பிரிவான கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியில், 331 கோடி ரூபாய் வரை புதிய முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. நாட்டின் இ.வி., சந்தையில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை உயர்த்தவும், மின்சார இருசக்கர வாகன உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த மூலதனம் பயன்படுத்தப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us