ADDED : ஜூலை 15, 2026 02:42 AM

சிக்மா சிஸ்டம்ஸ் வசம் பிரிட்டன் நிறுவனம்
சிக்மா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த பிளம்போர்டு பிரிசிஷன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை 153 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக தெரிவித்துஉள்ளது. இந்த சர்வதேச பரிவர்த்தனை வாயிலாக, சிக்மா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்தின் விண்வெளி துறை உற்பத்தி திறன் மற்றும் உலகளாவிய ஏரோ இன்ஜின் வினியோக தொடர் உயரும்.
க்ரிஸ்டல் கிராப் நிறுவனம் 6 தயாரிப்புகள் அறிமுகம்
க்ரிஸ்டல் கிராப் ப்ரோடெக் ஷன் நிறுவனம், நெல், சோயாபீன், சோளம் மற்றும் பருத்தி பயிர்களில் ஏற்படும் களைகள், நோய்கள்,பூச்சிகளை குறிவைத்துஆறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.விவசாயிகளின் விளைச்சலை மேம்படுத்தும் வகையில்
இந்த தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜே.எப்.கே., விமான நிலைய ஒப்பந்தத்தை பெற்ற டி.சி.எஸ்.,
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்., நியூயார்க்கின் 'ஜான் எப் கென்னடி' சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினல் ஒன் திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. 1.6 லட்சம் கோடி ரூபாய்மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ், டி.சி.எஸ்., நிறுவனம் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளைவழங்க உள்ளது.
டைட்டன் நிறுவனத்திற்கு ரூ.4 கோடி அபராதம்
டைட்டன் நிறுவனம், வருமான வரி துறையின் மதிப்பீட்டு பிரிவிடமிருந்து 4 கோடி ரூபாய் வரி அபராத உத்தரவை பெற்றுள்ளதாக பங்கு சந்தைகளிடம் தெரிவித்துள்ளது. வருமானத்தை குறைத்து காட்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செபி
விதிமுறைகளின் கீழ் இந்த அதிகாரப்பூர்வ தகவலை டைட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஷாவ்மி மீதான வரி விதிப்பு ஐ.டி.ஏ.டி., தடை நீட்டிப்பு
வருமான வரி மேல்முறையீட்டுதீர்ப்பாயம், ஷாவ்மி டெக்னாலஜி இந்தியா நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 10,833 கோடி ரூபாய் வரி விதிப்பு மீதான இடைக்கால தடையை மேலும் 180 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. மேல்முறையீடு முடியும் வரை அல்லது இந்த 180 நாட்கள் காலம் வரை, எது முன்னதாக வருகிறதோ அதுவரை இந்த தடைநீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
