ADDED : ஜூலை 15, 2026 02:44 AM

4,000
நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் இந்தியா போஸ்ட் ஈட்டிய வருவாய் 4,000 கோடி ரூபாயை கடந்துள்ளதாக, மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
14
ஆண்டு அடிப்படையில், கொல்கட்டாவில் கடந்த 6 மாத வீடுகள் விற்பனை 14 சதவீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான நைட் பிராங்க் இந்தியா நிறுவன
புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
6,51,000
கடந்த ஜூலை 13ம் தேதி வரை, நாட்டின் நேரடி வரி வசூல் 16 சதவீதம் அதிகரித்து,6.51 லட்சம் கோடி ரூபாயாகஉள்ளது. நிறுவனங்கள் செலுத்திய அதிக வரி இதற்கு காரணம்.
300
நாட்டின் பெரும் பணக்காரர்களின்சொத்துகளை கையாளும், கிட்டத்தட்ட 300 குடும்ப சொத்து மேலாண்மை அலுவலகங்களை முறைப்படுத்த பேமிலி ஆபிஸ் போரம் என்ற தளத்தை, தொழில் துறை அமைப்பான 'பிக்கி' அறிமுகம் செய்துள்ளது.
14,25,000
மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சந்தை 14.25 லட்சம் கோடி ரூபாய்என டெலாய்ட், எனேபிள் இந்தியா இணைந்து வெளியிட்ட
அறிக்கை தெரிவிக்கிறது.
