உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 28, 2026 01:14 AM

அ நிறம் | அளவு
ஐபோன் விற்பனை வளர்ச்சியில் 4 ஆண்டுகளில் முதல்முறை சரிவு
இந்தியாவில் கடந்த நா ன்கு ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை, முதன்முறையாக சிறிய மந்தநி லையை சந்தித்துள்ளது. சந்தை போட்டி, நுகர்வோர் தேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் வினியோக தொடர் உள்கட்டமைப்பு சவால்கள் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'டபுள் ஹார்'ஸை கைப்பற்ற விப்ரோ, முருகப்பா போட்டி
கேரளத்தை சேர்ந்த பிரபல உணவு பிராண்டான 'டபுள் ஹார்ஸ்' நிறுவனத்தை கைப்பற்றுவதற்காக விப்ரோ கன்ஸ்யூமர் கேர், முருகப்பா குழுமம் ஆகிய இரு நிறுவனங்களும் தீவிரமாக போட்டியிடுகின்றன. தங்களின் எஃப்.எம்.சி.ஜி., சில்லரை வர்த்தக வினியோக கட்டமைப்பை தென்னிந்திய சந்தைகளில் விரிவுபடுத்தும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
