தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : ஆக 11, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2026 01:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏர்டெல் பிஸினஸுடன் - ஐ.டி.ஐ., கூட்டணி



பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வர்த்தக பிரிவான ஏர்டெல் பிசினஸ் மற்றும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான ஐ.டி.ஐ., ஆகியவை இணைந்து நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த கூட்டணி வாயிலாக நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரினியூ சோலாரின் மின் திட்டங்களை கையகப்படுத்துகிறது சி.எஸ்.இ.சி.,



சி.எஸ்.இ.சி., நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான பூர்வா கிரீன் பவர், ரினியூ சோலார் பவரிடமிருந்து செயல்பாட்டில் உள்ள சோலார் மின் திட்டங்களை கையகப்படுத்த உள்ளது. இவ்வாறு கையகப்படுத்தப்படும் மின் உற்பத்தி திறன் 1.4 ஜிகாவாட் ஆகும். இதற்காக கிட்டத்தட்ட 4,859 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக சி.எஸ்.இ.சி., நிறுவனம் தேரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட், ஓட்டலுக்கு மஹிந்திரா முக்கியத்துவம்



மஹிந்திரா குழுமம், ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழில்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. மஹிந்திரா லைப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் மற்றும் மஹிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிசார்ட்ஸ் நிறுவனங்களை குழுமத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்யக்கூடிய நிறுவனங்களாக அடையாளம் கண்டு, அவற்றுக்கான தனிப்பட்ட வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

சர்லா ஏவியேஷனுக்கு வடிமைப்பு அங்கீகாரம்



பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மின்சார ஏர் டாக்சி நிறுவனமான சர்லா ஏவியேஷன், விமான வடிவமைப்பு அமைப்புக்கான அங்கீகாரத்தை விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம் இருந்து பெற்றுள்ளது. இதன் வாயிலாக தனது மின்சார விமானங்களை முழு அளவிலான வர்த்தக உற்பத்திக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொள்ள முடியும்.

லாஜிக்ஸ்ஏர் நிறுவனத்தில் சென்னை நிறுவனம் முதலீடு



சென்னையை சேர்ந்த ஏஞ்சல் முதலீட்டு அமைப்பான தி சென்னை ஏஞ்சல்ஸ், ஹைதராபாத்தை் சேர்ந்த லாஜிக்ஸ்ஏர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. நடுத்தர தூர சரக்கு போக்குவரத்துக்காக தானியங்கி, ஹைபிரிட் மின்சார விமானங்களை உருவாக்கி வரும் லாஜிக்ஸ்ஏர், இந்தியாவின் சரக்கு போக்குவரத்தை விமான சேவை வாயிலாக மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

ஏர்டெல் பிஸினஸுடன் - ஐ.டி.ஐ., கூட்டணி



பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வர்த்தக பிரிவான ஏர்டெல் பிசினஸ் மற்றும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான ஐ.டி.ஐ., ஆகியவை இணைந்து நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த கூட்டணி வாயிலாக நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு தீர்வுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட், ஹோட்டலுக்கு மஹிந்திரா முக்கியத்துவம்



மஹிந்திரா குழுமம், ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் தொழில்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. மஹிந்திரா லைப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் மற்றும் மஹிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிசார்ட்ஸ் நிறுவனங்களை தன் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்யக்கூடிய நிறுவனங்களாக இக்குழுமம் அடையாளம் கண்டுள்ளது.

ரினியூ சோலாரின் மின் திட்டங்களை கையகப்படுத்துகிறது சி.எஸ்.இ.சி.,



சி.எஸ்.இ.சி., நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான பூர்வா கிரீன் பவர், ரினியூ சோலார் பவரிடமிருந்து செயல்பாட்டில் உள்ள சோலார் மின் திட்டங்களை கையகப்படுத்த உள்ளது. இவ்வாறு கையகப்படுத்தப்படும் மின் உற்பத்தி திறன் 1.4 ஜிகாவாட் ஆகும். இதற்காக 4,859 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக சி.எஸ்.இ.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்லா ஏவியேஷனுக்கு வடிமைப்பு அங்கீகாரம்



பெங்களூரு தலைமையிடமாக கொண்டு செயல்படும் மின்சார ஏர் டாக்சி நிறுவனமான சர்லா ஏவியேஷன், விமான வடிவமைப்பு அமைப்புக்கான அங்கீகாரத்தை விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து பெற்றுள்ளது. இதன் வாயிலாக தன் மின்சார விமானங்களை முழு அளவிலான வர்த்தக உற்பத்திக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொள்ள முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us