ADDED : ஆக 11, 2026 01:40 AM

176
புனேவைச் சேர்ந்த சேஜ்ஒன் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனம், சர்க்கரை தயாரிப்பு நிறுவனமான ஈ.ஐ.டி., பாரி இந்தியாவில் தன்வசம் இருந்த 1.24 சதவீத பங்குகளை, எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டுக்கு 176 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
1,760
2025 - 26 எத்தனால் வினியோக ஆண்டுக்காக 1,050 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முதல் முறையாக வெளியிட்ட டெண்டருக்கு சுமார் 1,760 கோடி லிட்டர் எத்தனால் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வந்தன. இதில், 378 நிறுவனங்களிடம் இருந்து 1,048.5 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
18
முதல் 1,000 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த லாபம், கடந்த 21 மாதங்களில் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக சொத்து மேலாண்மை நிறுவனமான ஏ.எம்.சி., தெரிவித்துள்ளது.
24.02
ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கச்சா ஸ்டீல் உற்பத்தி, ஜூலை மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்து 24.02 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் உற்பத்தி 23.27 லட்சம் டன்னாக இருந்தது.
385
பயோடீல் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், தொழில் விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு பணிகளுக்காக 385 கோடி ரூபாய் முதலீட்டை ஆர்.எம்.பி., கேபிடல்வொர்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது.
