தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்


ADDED : ஆக 12, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 02:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பெல்' ரூ.541 கோடிக்கு ராணுவ ஆர்டர் பெற்றது

மத்திய பொது நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து, 541 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் ஆர்டர் பெற்றது. தொலைத்தொடர்பு கருவிகள், வெடி பொருட்கள், வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தொடர்பான அமைப்புகள், உதிரிபாகங்கள், சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு இந்நிறுவனம் ஆர்டர் பெற்றுள்ளது.

ரூ.2,500 கோடி திரட்டும் பாரத் போர்ஜ் நிறுவனம்

வாகன, ராணுவம், வான்வெளி தொடர்பான உற்பத்திகளை மேற்கொள்ளும் பாரத் போர்ஜ் நிறுவனம், 2,500 கோடி ரூபாய் மூலதனம் திரட்ட, அதன் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 12 - 18 மாதங்களில் எரிசக்தி உற்பத்தி அமைப்புகள், செமிகண்டக்டர், வான்வெளி உதிரிபாகங்கள், ராணுவம் தொடர்பான உற்பத்திகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அரிய காந்தம் தயாரிக்க எல் அண்டு டி., திட்டம்

எல் அண்டு டி., நிறுவனம், இந்தியாவில் அரிய உலோகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் காந்தங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. முக்கிய தொழில்துறை பொருட்களுக்கான இறக்குமதி சார்பை, குறிப்பாக, சீனாவை அதிகளவில் சார்ந்திருக்கும் நிலையை குறைக்க, மத்திய அரசின் முயற்சிக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.சி.எல்., டெக்கில்தரவு கசிவு இல்லை

ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவன ஊழியர்கள் தொடர்பான சில தகவல்கள் வெளியானதாக ஹேக்கர் குழு தெரிவித்த புகார் குறித்து நிறுவனம் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில், அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் எந்தவித ஊடுருவலும் கண்டறியப்படவில்லை; வெளியானதாக கூறப்படும் தகவல்கள் குறைந்த அளவிலும், பழையதாகவும் இருக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாதில் உருவாகும்'டிரம்ப்' பிராண்டு வீடுகள்

டிரிபெகா டெவலப்பர்ஸ் மற்றும் ஐரா ரியால்டி நிறுவனங்கள் இணைந்து, ஹைதராபாதில் 'டிரம்ப்' பிராண்டிலான சொகுசு குடியிருப்பு திட்டத்தை 2,000 கோடி ரூபாய் முதலீடடில் உருவாக்க உள்ளன. சர்வதேச தரத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இந்நகரில் உயர்தர குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us