ADDED : ஆக 12, 2026 02:03 AM

23
நடப்பு நிதியாண்டில் ஆக., 10 வரை, நேரடி வரி வசூல் 23% அதிகரித்து, 8.11 லட்சம் கோடி ரூபாயாகியுள்ளது. இதில், நிறுவன வரி வசூல் 2.70 லட்சம் கோடி ரூபாய்
20,000
சாம்சங் நிறுவனம் 10 மாநிலங்களில் 20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி அளிக்க உள்ளது. இது மத்திய அரசு துறைகளின் உதவியுடன் நடக்கவுள்ளது.
8
2026- - 27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய ஜி.டி.பி., வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என எஸ்.பி.ஐ., ஆய்வு அறிக்கை கணித்துள்ளது.
77,70,000
பிரதமரின் சூரிய வீடு திட்டத்துக்கு 2024 பிப்ரவரி முதல் இதுவரை 77.7 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 41.9 லட்சம் கூரை சூரிய மின் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
57.5
கடந்த ஏப்ரல் - ஜூனில், ஸ்மார்ட்போன் விலை உயர்வால், இரண்டாம் நிலை நகரங்களில் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் 57.5% இ.எம்.ஐ.,யில் வாங்கப்பட்டதாக 'கவுன்டர்பாயின்ட்' ஆய்வு கூறுகிறது.
