தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்


ADDED : ஆக 23, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 01:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதலீட்டாளர்களை அதிகரிக்கும் 'ஸ்ரீராம் வெல்த்'

ஸ்ரீராம் வெல்த் நிறுவனம், தற்போது 2 கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய்வரை முதலீடு செய்யும் வசதி கொண்ட வாடிக்கையாளர்களுக்கான நிதி சேவைகளை அளித்துவருகிறது. அடுத்த 12-18 மாதங்களில், ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களையும் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 4,400 கிளைகள் கொண்ட ஸ்ரீராம் குழும கட்டமைப்பை பயன்படுத்தி, 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களுக்கும் சேவையை விரிவுபடுத்த உள்ளது.

ஜோடி ஆப் வழக்கில் சமரசத்துக்கு அறிவுறுத்தல்

'ஜோடி ' எனும் வர்த்தக முத்திரையை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பான வழக்கில், மேட்ரிமோனி டாட் காம் மற்றும் ஜோடி365 ஆப் நிறுவனமான, ப்ரீ எலெக்டிவ் நெட்வொர்க் இடையே வழக்கு நடக்கிறது. இதில் சமரசம் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேட்ரிமோனி டாட் காம் தனது செயலிக்கு, 'ஜோடி மேட்ரிமோனி' என பெயர் மாற்ற முன்வந்துள்ளது. இரு நிறுவனங்களும் உடன்பாட்டுக்கு வராவிட்டால் மனுவை மீண்டும் நீதிமன்றம் பரிசீலிக்கும்.

பதிவு செய்யாத நிறுவனங்கள் எண்ணிக்கை 9.20 சதவிகிதம் உயர்வு

பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் எண்ணிக்கை ஏப்.,-ஜூன் காலாண்டில், 9.2 சதவீதம் அதிகரித்து 8.67 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது, 7.94 கோடியாக இருந்தது. இந்நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கையும் 6.5 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து, 13.70 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us