ADDED : ஆக 23, 2026 01:59 AM

400
கடந்த 2014ல் ஒன்று மட்டுமே இருந்த விண்வெளி துறை ஸ்டார்ட்அப், கடந்த 12 ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து,2026ல் எண்ணிக்கை 400ஐ தாண்டியது
33,00,000
வரும் 2030க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைவதற்கான செலவு, 33 லட்சம் கோடி ரூபாய் ஆகும் என, மத்திய அரசின் நிதி சேவைகள் துறை கணக்கிட்டுள்ளது
16,815
கடந்த 2024- - 25ல் இந்தியா - பூட்டான் இடையே மொத்த இருதரப்பு வர்த்தகம் 16,815 கோடி ரூபாயாக இருந்தது
8.70
பதினைந்து முதல் 29 வயதுக்குட்பட்ட 8.70 கோடி இந்திய இளைஞர்கள் கல்வி கற்காமலும், வேலையில்லாமலும், எந்தவொரு பயிற்சியும் பெறாமலும் உள்ளனர் என்று நிடி ஆயோக் தெரிவித்துள்ளது
28,840
உடான் திட்டத்தில் 2036க்குள் 100 விமானங்கள், 200 ஹெலிபேட்களை உருவாக்கவும்,பைலட்களுக்கான பயிற்சியை விரிவுபடுத்தவும் 28,840 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.
