தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : ஆக 25, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கி நிதி



ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கி மற்றும் ஐ.ஐ.எம்., கொல்கட்டா புதுமை பூங்கா இணைந்து, நிலையான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 'இக்னைட்' திட்டத்தை தொடங்கியுள்ளன. இதன் கீழ் 16 புத்தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் 2 கோடி ரூபாய் நிதி மற்றும் செயல்பாட்டு ஆதரவு வழங்கப்படும். இதில் 1.36 கோடி ரூபாய் நேரடி மானியமாக வழங்கப்படும். பசுமை உற்பத்தி, கழிவு மறுசுழற்சி, தூய்மை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகள் இதில் அடங்கும்.

ஹரியானாவில் கோத்ரெஜ் ரூ.20,000 கோடி முதலீடு



கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம், ஹரியானா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அம்மாநிலத்தில் சுமார் ரூ.20,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் வாயிலாக சுமார் 40,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் முக்கிய பங்களிப்பை வழங்கும். அந்நிறுவனம் ஹரியானாவில் ஏற்கனவே, 11,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. வரும் 2028ம் நிதியாண்டுக்குள் மேலும் 16,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.

ஓரியன்டல் ஹோட்டல்ஸ் ஐ.எச்.சி.எல்., இணைப்பு



டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் , ஓரியன்டல் ஹோட்டல்ஸ் நிறுவனத்தை பங்குகள் பரிமாற்ற அடிப்படையில் இணைக்க உள்ளது. இதற்கான ஏற்பாட்டு திட்டத்துக்கு இரு நிறுவனங்களின் இயக்குனர் குழுக்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, 117 ஓரியன்டல் ஹோட்டல்ஸ் பங்குகளுக்கு 25 ஐ.எச்.சி.எல்., பங்குகள் வழங்கப்படும். இந்த இணைப்பு 2028-ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரியன்டல் ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு 7 ஓட்டல்கள், 825 அறைகள் உள்ளன. இதில் சென்னை தாஜ் கோரமண்டல், தாஜ் பிஷர்மேன் கோவ் உள்ளிட்ட ஓட்டல்களும் அடங்கும்.

ஐ.ஐ.டி., கான்பூருக்கு ரூ.300 கோடி நன்கொடை



ஐ.ஐ.டி., கான்பூர் முன்னாள் மாணவரும், இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகேஷ் கங்வால், ஐ.ஐ.டி., கான்பூரில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி அமைக்க மேலும் 300 கோடி ரூபாய் வழங்க உறுதியளித்துள்ளார். இதற்கு முன், 2022ல் அவர் 100 கோடி ரூபாயை வழங்கியிருந்தார். ஐ.ஐ.டி., வளாகத்தில் 500 படுக்கைகள் கொண்ட உயர் சிறப்பு மருத்துவமனையும், 200 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனம், மேற்கு வங்கத்தில் முதலீடு



ஜி.ஆர்.எஸ்.இ., எனும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனம், மேற்கு வங்கத்தில் 3 புதிய கப்பல் கட்டும் மையங்களை அமைக்க 2,670 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. ரைசாக் பகுதியில் 2,500 கோடி ரூபாயும், ஷாலிமாரில் 100 கோடி ரூபாயும், கிடர்பூர் டாக்ஸில் 70 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் வாயிலாக, பெரிய மற்றும் சிக்கலான கப்பல் கட்டும் திட்டங்களை செயல்படுத்தும் திறன் அதிகரிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us