ADDED : ஆக 25, 2026 12:39 AM

8,622
இந்திய விமான நிலைய ஆணையத்தால் குத்தகைக்கு விடப்பட உள்ள 11 விமான நிலையங்களை, இயக்குவதற்கு தனியார் நிறுவனங்கள் 8,622 கோடி முதலீடு செய்யவுள்ளன.
5
உலக அளவில், கடந்த 5 ஆண்டுகளில் மியூச்சுவல் பண்டு துறை மிக வேகமாக வளர்ந்த நாடுகளில் இந்திய முதலிடம் வகிக்கிறது. எனினும், உலகின் மொத்த மதிப்பில் இந்தியாவின் பங்கு 1 சதவீதம் மட்டுமே.
3
நம் நாட்டில் பணிக்கு செல்லும் பெண்களில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த, நிரந்தர பணிகளில் உள்ளதாக, திட்டமிடும் அமைப்பான நிடி ஆயோக் தெரிவித்துள்ளது.
2,500
நம்நாட்டில் இதுவரை 27,555 மின்சார பேருந்துகள் வாங்க அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையிலும், வெறும் 2,500 மின்சார பேருந்துகள் மட்டுமே சாலைகளுக்கு வந்துள்ளதாக தரவு தெரிவிக்கிறது.
96
பருவ மழை குறைவால், பாதிக்கப்பட்டிருந்த காரீப் சாகுபடி பரப்பு சரிவு, தற்போது குறைந்து, 96 சதவீத பரப்பில் விதைப்பு நடந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
