ADDED : ஆக 28, 2026 01:32 AM

ரூபிகான் ரிசர்ச் பங்குகள்ரூ.2,299 கோடிக்கு விற்பனை
ரூபிகான் ரிசர்ச் நிறுவனத்தின் புரமோட்டர்களில் ஒன்றான ஜெனரல் அட்லாண்டிக், அந்நிறுவனத்தில்தனக்கு இருந்த 8.4 சதவீத பங்குகளை 2,299 கோடி ரூபாய்க்கு விற்பனை
செய்துள்ளது. மொத்தம் 1.385 கோடி பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக தங்களின்
புரமோட்டர் பங்கு கணிசமான அளவு குறைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெச்.ஏ.எல்., - சாம்டெல் புதிய ஆலை திறப்பு
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் சாம்டெல் நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவின் முதல் அரசு - தனியார் பாதுகாப்பு விமான மின்னணு ஆலையை குருகிராமில் திறந்துள்ளன. மேம்பட்ட காட்சித்திரை அமைப்புகளுக்கான சோதனை, தர உறுதி, வடிவமைப்பு, மேம்பாடு,
உற்பத்தி மற்றும் தயாரிப்பு ஆதரவு பணிகள் ஆகியவை இந்த ஆலையில் மேற்கொள்ளப்படும்.
செயல்பாட்டுக்கு வந்தது ஹிண்டால்கோ ஆலை
ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கர்நாடகாவில் அமைத்துள்ள, இந்தியாவின் முதல் சூப்பர்பைன் பி.பி.டி., ஏ.டி.ஹெச்., தயாரிப்பு ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஆண்டுக்கு 30,000 டன் உற்பத்தி திறன் கொண்ட இந்த ஆலையில், மின் கம்பிகள் உள்ளிட்டவற்றுக்கான தீ தடுப்பு பொருட்கள் தயாரிக்கப்படும்.
