ADDED : ஆக 28, 2026 01:30 AM

1.46
கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் மில்மா நிறுவனம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 1.46 கோடி லிட்டர் பாலை விற்பனை செய்துள்ளது
9,000
இந்தியாவின் தாவர அடிப்படையிலான புரத பொருட்கள் சந்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி 9,000 கோடி ரூபாயை எட்டும் என, தொழில் அமைப்பான பி.பி.எப்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது
26
இந்தியாவில் 86 சதவீத நிறுவனங்கள் ஆட்கள் தேர்வு நடவடிக்கைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக, ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
25,00,000
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஐயுஸ்டஸ், பெங்களூருவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்
25,00,000 சதுர அடி பரப்பளவில் குடியிருப்பு மற்றும் வர்த்தக திட்டங்களை உருவாக்க உள்ளது
1,71,800
குழந்தைகளின் சமூக வலைதள பயன்பாடு தொடர்பான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர, மெட்டா நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் 1,71,800 கோடி ரூபாய் வரை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
