தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்


UPDATED : நவ 11, 2026 05:02 PM

ADDED : நவ 11, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 05:02 PM ADDED : நவ 11, 2026 05:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓபன் ஏ.ஐ., (Tag)

சுற்றுலா நிறுவனத்தை வாங்கியது

செயற்கை நுண்ணறிவு மூலம் சுற்றுலா பயணங்களை திட்டமிட உதவும் 'ஒடெசியா' நிறுவனத்தை ஓபன் ஏ.ஐ., வாங்கியுள்ளது. விமான டிக்கெட், ஓட்டல் முன்பதிவு, சுற்றுலா இடங்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட சேவைகளை ஒடெசியா வழங்கி வந்தது. அதன் நிறுவனர் பிரான்சிஸ் டேவிட்சன், ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம் சுற்றுலா திட்டமிடல் தொடர்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் வாய்ப்பு ஓபன் ஏ.ஐ., நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

அக்கோர் (Tag)

உத்தரகண்டில் புதிய ஓட்டல்



உத்தரகண்டில் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா அருகே, 150 அறைகளுடன் புதிய ஓட்டல் அமைக்க அக்கோர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 'நோவோடெல் ஜிம் கார்பெட் சோய்' என்ற பெயரில் அமையும் இந்த ஓட்டல், 2029ல் திறக்கப்பட உள்ளது. ஸ்ரீ சங்கடமோச்சனாயா ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஓட்டலில் உணவகங்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் மற்றும் கூட்ட அரங்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற உள்ளன.

பிளை91 (Tag)

நவிமும்பைக்கு புதிய விமான சேவை



மஹாராஷ்டிராவின் நவிமும்பை – சிந்துதுர்க் இடையே, நவ.16 முதல் தினசரி விமான சேவையை தொடங்க பிளை91 நிறுவனம் அறிவித்துள்ளது. நவிமும்பையில் இருந்து காலை 7:55 மணிக்கு புறப்படும் விமானம், 9:05 மணிக்கு சிந்துதுர்க் சென்றடையும். மறுமார்க்கத்தில் காலை 9:25 மணிக்கு புறப்பட்டு, 10:35 மணிக்கு நவிமும்பை வந்தடையும். புதிய சேவை மூலம் கொங்கண் கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் விமான போக்குவரத்து வசதி கிடைக்கும்.

அமேசான் பே(Tag)

ஓட்டல் முன்பதிவுக்கு தள்ளுபடி



விமானம் மற்றும் ஓட்டல் முன்பதிவுகளுக்கு, நவ.12 முதல் 26 வரை சிறப்பு தள்ளுபடி விற்பனையை அமேசான் பே நிறுவனம் அறிவித்துள்ளது. 'இம்பாசிபிள் டிராவல் டீல்ஸ்' என்ற பெயரில் நடைபெறும் விற்பனையில், ஓட்டல் முன்பதிவுக்கு அதிகபட்சம் 65 சதவீதமும், விமான டிக்கெட்டுகளுக்கு 30 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும். முன்பதிவு செய்யும் இடம், பயண தேதி, பணம் செலுத்தும் முறை ஆகியவற்றை பொறுத்து சலுகைகள் மாறுபடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us