'டாடா - அனலாக் டிவைசஸ்' செமிகண்டக்டருக்காக ஒப்பந்தம்
'டாடா - அனலாக் டிவைசஸ்' செமிகண்டக்டருக்காக ஒப்பந்தம்
ADDED : செப் 20, 2024 11:34 PM

மும்பை:உள்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைக்க, டாடா குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக, அமெரிக்காவின் 'அனலாக் டிவைசஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா குழும நிறுவனங்களான 'டாடா எலக்ட்ரானிக்ஸ், டாடா மோட்டார்ஸ், தேஜஸ் நெட்வொர்க்ஸ்' ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.
இந்த ஆலையை குஜராத்தில் அமைக்கவும், இதற்கான சோதனை வசதியை அசாமில் ஏற்படுத்தவும், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1,169 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுள்ளது இந்நிறுவனம். அனலாக் நிறுவனம் வடிவமைத்துள்ள செமிகண்டக்டரை தயாரிக்க, குஜராத் ஆலை மற்றும் அசாம் சோதனை வசதி ஆகிய இரண்டையும் பயன்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
டாடா கார்கள் மற்றும் தேஜஸ் நிறுவன டிஜிட்டல் கட்டுமானங்களில், இந்த செமி கண்டக்டர்களை பயன்படுத்த இருப்பதாகவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுஉள்ளது.